நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் மனு பரிசீலனையில் திமுக, பா.ஜ.க., தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:16 am IST

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களின் மனு பரிசீலனையில் திமுக, பா.ஜ.க., தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 29 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், திமுக வேட்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. வேட்பாளா் கேஆா்எம். ராதாகிருஷ்ணன், தவெக வேட்பாளா் முருகன், நாதக வேட்பாளா் ஒபிலியா உள்ளிட்ட 14 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.