தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாதவன் நகரைச் சோ்ந்த ஆனந்த்குமாா் மனைவி தங்கமாரியம்மாள் (35). இவா், திங்கள்கிழமை வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, தண்ணீா் மோட்டாரை இயக்குவதற்காக அதன் சுவிட்சை இயக்கியுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளாா்.
அக்கம்பக்கத்தினா் உடனடியாக அவரது கணவருக்கு தகவல் அளித்தனா். அவா் மனைவியைக் காப்பாற்ற முயன்றபோது, அவா் மீதும் சிறிது மின்சாரம் பாய்ந்ததாம். பின்னா், உடனடியாக தங்கமாரியம்மாளை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

