நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து விற்பனையானது.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 2:12 am IST

தூத்துக்குடி பகுதியில் தற்போது மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாத நிலையில், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து விற்பனையானது.

மீன்பிடித் தடைக்காலம் என்பதால் தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. நாட்டுப் படகுகள் மட்டுமே கடலுக்குச் செல்கின்றன.

தூத்துக்குடி, திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின.

கோடை வெயில் காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. ஆனால், பள்ளி விடுமுறைக் காலம் என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

இதனால், மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது. சீலா மீன் கிலோ ரூ. 1,100 முதல் ரூ. 1,200 வரையும், விளை மீன், ஊழி மீன், பாறை மீன் ஆகிய ரகங்கள் ரூ. 500 முதல் ரூ. 600 வரையும், கிழவாலை, சூரை, கேரை ஆகிய ரகங்கள் ரூ. 250 வரையும், நண்டு ரூ. 700 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரையும், முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 2,000 வரையும், வங்கனை ஒரு கூடை ரூ. 3,000 வரையும் விற்பனையானது.

மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டதால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா். விலையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.