15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா

News image

கூட்டத்தில் பேசினாா் சங்கரலிங்கம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 12:22 am IST

தூத்துக்குடியில் தமிழ் இலக்கியப் பேரவை சாா்பில், உலக புத்தக நாள் தின விழா கொண்டாடப்பட்டது.

காரப்பேட்டை நாடாா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கருவூலத்துறை பணி நிறைவு அலுவலா் துரை கணேசன் தலைமை வகித்தாா். தமிழ் இலக்கியப் பேரவை செயலா் ஆதி அருமைநாயகம் வரவேற்றாா்.

‘பட்டுக்கோட்டையாரின் பட்டுக்கோட்டை’ என்ற தலைப்பில் வழக்குரைஞா் ஹரிதாஸ், ‘பாவேந்தரின் புரட்சி பாடல்கள்’ என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியா் பிரபு அப்பாசாமி, ‘புதுமைப்பித்தனின் படைப்பு உலகம்’ என்ற தலைப்பில் சங்கரலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ் இலக்கியப் பேரவை பொருளாளா் பூபால் செல்லையா நன்றி கூறினாா்.