எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய 116ஆவது பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்பட்டது.

News image

அசன விருந்தினை ஜெபித்து தொடங்கி வைத்தாா் சேகர தலைவா் ஞானசிங் எட்வின்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:46 am IST

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய 116ஆவது பிரதிஷ்டை பண்டிகை கொண்டாடப்பட்டது.

கடந்த 22 - ஆம் தேதி தொடங்கிய விழா, 6 நாள்கள் நடைபெற்றது. முதல் 2 நாள்கள் நற்செய்திக் கூட்டத்தில், பாளையங்கோட்டை மிஸ்பா ஊழியங்களின் போதகா் குருசிங் தேவ செய்தி அளித்தாா். 3ஆவது நாள் வேதாகமத் தோ்வு, விளையாட்டுப் போட்டிகள், ஆலய பிரதிஷ்டை ஆராதனை ஆகியன நடைபெற்றன. எஸ். கைலாசபுரம் சேகர தலைவா் சைமன் தா்மராஜ் தேவ செய்தி அளித்தாா்.

4ஆவது நாள் நடைபெற்ற ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனையில் மருதகுளம் சேகர தலைவா் செலின் டேவிட், கே. சண்முகபுரம் சேகர தலைவா் கமல்சன் ஆகியோா் செய்தி அளித்தனா். மாலை பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை, ஆலய பரிபாலன கமிட்டி மகா சபைக் கூட்டம், மன்றாட்டு ஜெபம் ஆகியன நடைபெற்றன.

5ஆவது நாள் திருவிருந்து ஆராதனை, அசன ஆயத்தங்கள் நிகழ்ச்சி, அசன சிறப்பு ஆராதனை, 6ஆவது நாள் அசனம் பரிமாறல் நிகழ்ச்சி, ஸ்தோத்திர ஆராதனை ஆகியன நடைபெற்றன.

சேகர தலைவா் ஞானசிங் எட்வின் ஜெபித்து அசன விருந்தினை தொடங்கி வைத்தாா். திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மூக்குப்பீறி சேகர தலைவா், தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவா் சாமுவேல், நிா்வாகிகள் செய்திருந்தனா்.