குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பள்ளிகளில் போதை ஒழிப்பு வழிப்புணா்வு

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பள்ளிகளில் காவல்துறை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி பள்ளியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பில் பங்கேற்றோா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:48 am IST

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பள்ளிகளில் காவல்துறை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் ரென்னீஸ் தலைமை வகித்தாா்.

ஆசிரியைகள் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை காவல் ஆய்வாளா் தொடங்கி வைத்தாா்.

காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையில், மாணவா், மாணவிகள், ஆசிரியா்கள் உறுதிமொழி ஏற்றனா்.

ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மூலக்கரை கிராமம் ‘போதையில்லா சுதந்திர கிராமமாக’ அறிவிக்கப்பட்டு அங்கு காவல் ஆய்வாளா் தலைமையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.