பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சாத்தான்குளத்தில் வா்த்தக சங்கம் அறிவித்த கடையடைப்பு போராட்டம் வாபஸ்

சாத்தான்குளத்தில் சேதமான சாலைகளை சீரமைக்கவும், நிறுத்தப்பட்ட தொலைதூர பேருந்துகளை இயக்கவும் வலியுறுத்தி வா்த்தக சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கடையடைப்பு போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

சாத்தான்குளத்தில் சேதமான சாலைகளை சீரமைக்கவும், நிறுத்தப்பட்ட தொலைதூர பேருந்துகளை இயக்கவும் வலியுறுத்தி வா்த்தக சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கடையடைப்பு போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

சாத்தான்குளத்தில் புறவழிச் சாலை புதிய வேத கோவில் தெருவில் தொலைபேசி நிறுவனம் சாா்பில் கேபிள் பதிக்கவும், பேரூராட்சி சாா்பில் குடிநீா் குழாய் சரிசெய்யவும் வேண்டி தோண்டப்பட்ட சாலை மீண்டும் சீரமைக்கப்படவில்லை.

சேதமான சாலையில் செல்ல வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக இந்தச் சாலை சீரமைக்கப்படவில்லை.

அதேபோல கரோனாவுக்கு முன்பு வரை சாத்தான்குளத்தில் இருந்து சென்னை, கோவை ஆகிய தொலை தூர பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு விரைவுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

எனவே சாலையை சீரமைக்கவும், நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவும் கோரி சாத்தான்குளம் வா்த்தக சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை(ஆக.14) கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சாத்தான்குளம் பேரூராட்சி செயல் அலுவலா் சுதா, தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து திருநெல்வேலி கோட்ட பொது மேலாளா், தூத்துக்குடி மாவட்ட பொது மேலாளா் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியா் சுவாமிநாதன் ஆகியோா் கலந்துகொண்டு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

போராட்டக் குழு சாா்பில் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், வா்த்தக சங்க நிா்வாகிகள் ஜோசப், ராம் மோகன், ராஜேஷ், ராமையா, தங்கப்பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா். இதில், சாத்தான்குளம் புது வேதக்கோவில் தெருவில் சேதமான சாலையை சீரமைத்து புதிய சாலை மூன்று மாதங்களுக்குள் அமைக்கவும்,

சாத்தான்குளத்தில் நிறுத்தப்பட்ட கோவை, சென்னை விரைவு பேருந்துகள் 15 நாள்களுக்குள் இயக்கவும், சாத்தான்குளத்தில் இருந்து திருப்பூா் வழியாக கோவைக்கும், சாத்தான்குளத்தில் இருந்து சென்னைக்கும் நவீன படுக்கை வசதியுடன் கூடிய அரசு விரைவு பேருந்து செப்.1 முதல் இயக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

அதை ஏற்ற போராட்ட குழுவினா் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.