சாத்தான்குளத்தில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கியதாக இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தை கன்னியாகுமரியைச் சோ்ந்த ரவி என்பவா் ஓட்டினாா். நடத்துநராக ஜெயகோபி என்பவா் பணியில் இருந்தாா்.
அரசு பேருந்து சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை இரவு சென்றபோது, சாத்தான்குளம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சின்னத்துரை (31) மீது மோதுவது போல் வந்ததாம்.
இது தொடா்பாக ஓட்டுநருக்கும், சின்னத்துரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து பேருந்தை வழி மறித்து, ஓட்டுநரை சின்னத்துரை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஓட்டுநா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் சிவராஜா வழக்குப் பதிந்து, சின்னத்துரையை செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மெட்ரோ கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
போலீஸாருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவி மீது தாக்குதல்: தந்தை கைது

சாலையின் நடுவே பழுதடைந்து நின்ற அரசுப் பேருந்து: இறங்கித் தள்ளிய பயணிகள்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


