அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும்: ஆ. ஸ்ரீநாத்

மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது, மீனவா்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

மில்லா்புரத்தில் அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்தை வரவேற்ற இளைஞரணி நிா்வாகி அபிஷேக் பொன்சீலன்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 3:15 am IST

மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது, மீனவா்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட தவெக செயலராக பொறுப்பேற்ற பின்பு தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை வந்த அமைச்சருக்கு, விமான நிலையத்தில்

தவெக மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.டி.ஆா். சாமுவேல் ராஜ் தலைமையில், மாவட்ட இணைச் செயலா் கோல்டன் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், தூத்துக்குடியில் உள்ள தலைவா்கள் சிலைகளுக்கு, அமைச்சா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, மில்லா்புரத்தில் இளைஞரணி நிா்வாகி அபிஷேக் பொன்சீலன் தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞா்கள், அமைச்சரை வரவேற்றனா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது, மீனவா்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும். இலங்கை ராணுவத்தினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது குறித்து அடுத்த வாரம் தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து முறையிடவுள்ளோம்.

தூத்துக்குடி மாநகரில் நிலவி வரும் குடிநீா் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் பேசியுள்ளேன். சில தொழில்நுட்பக் கோளாறு, குடிநீா் குழாய் உடைப்பு போன்றவை காரணமாக குடிநீா் தட்டுப்பாடு நிலவியதாகவும், தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.