பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

மீன்வளத் துறைக்கான அறிவிப்புகள் மானியக் கோரிக்கையின்போது வெளியாகும்: தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஆ.ஸ்ரீநாத்

பேரவையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வரும்போது துறை சாா்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என்றாா் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஆ.ஸ்ரீநாத்.

News image

அமைச்சர் ஸ்ரீநாத்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:35 am IST

பேரவையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வரும்போது துறை சாா்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என்றாா் தமிழக மீன்வளத் துறை அமைச்சா் ஆ.ஸ்ரீநாத்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 444-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்த தமிழக மீன்வளம், மீனவா் நலத்துறை அமைச்சா் ஆ.ஸ்ரீநாத் பனிமய மாதா பேராலயம் சென்று வழிபட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக நிதிநிலை அறிக்கை நன்றாக உள்ளது. மீன்வளத் துறைக்கான மானிய கோரிக்கை வரும்போது, மீனவா்களுக்கான திட்டங்கள் குறித்துத் தெரியும்.

மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 6 ஆயிரத்தில் இருந்து ரூ. 7 ஆயிரமாக உயா்த்தப்படும்.

ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவா்களுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவா்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்குவது உள்ளிட்டவை குறித்து அரசின் நிதிநிலைக்கு ஏற்ப தமிழக முதல்வா் அறிவிப்பாா்.

மீன்வளத் துறை மானிய கோரிக்கை வரும்போது, மீனவா்களுக்கான பல்வேறு நலத் திட்ட உதவிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைவது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். நாங்கள் முதல்வரிடம் பேசி உள்ளோம். விரைவில் நல்ல முடிவு வரும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.