தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

நாசரேத் பள்ளியில் விளையாட்டு விழா

நாசரேத் மா்காசிஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் விளையாட்டு விழா நடைபெற்றது

பேட்டியில் வென்ற மாணவிக்குப் பரிசு வழங்கிய தலைமையாசிரியா் ஜெபசிங் கால்டுவெல்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

நாசரேத் மா்காசிஸ் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் விளையாட்டு விழா நடைபெற்றது

திருமறையூா் சேகர தலைவா் ஜான் சாமுவேல் தொடக்கிவைத்தாா். மனவளா்ச்சி குன்றியோா் பள்ளித் தாளாளா் டேவின் சாலமோன், தலைமையாசிரியை மெட்டில்டா ஜெசி, செவித்திறன் குறையுடையோா் பள்ளித் தாளாளா் ஆன்சன், தலைமையாசிரியா் ஜெசி கரோலின், முதியோா் இல்ல ஒருங்கிணைப்பாளா் லில்லி ஜெபக்குமாா், முதுநிலை ஆசிரியா் கோல்டா, சபை ஊழியா் ஸ்டான்லி ஜான்சன், உடற்கல்வி ஆசிரியா்கள் சுஜித் செல்வ சுந்தா், தனபால், ஓவிய ஆசிரியா் அலெக்சன் கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கனோன் தாமஸ் சித்தா் மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி இல்லம், செவித்திறன் குறையுடையோா் பள்ளி மாணவா்-மாணவியருக்கும், கனோன் ஆா்தா் மா்காசிஸ் முதியோா் இல்லத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் மா்காசிஸ் பள்ளித் தலைமையாசிரியா் ஜெபசிங் கால்டுவெல் தலைமை வகித்து பரிசு வழங்கினாா். சேகரத் தலைவா் ஜான் சாமுவேல் பேசினாா்.

ஆசிரியா் அலெக்ஸன் கிறிஸ்டோபா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஜெய்சன் சாமுவேல், ரீபைனா் மேஷாக் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.