ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியல்: 27 போ் கைது

கோவில்பட்டியில் சாலையை விரிவுபடுத்தி சீரமைக்கக் கோரி, எட்டயபுரம் சாலையில் உள்ள மங்கள விநாயகா் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சாலை மறியலில் பங்கேற்றோா்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:41 am IST

கோவில்பட்டியில் சாலையை விரிவுபடுத்தி சீரமைக்கக் கோரி, எட்டயபுரம் சாலையில் உள்ள மங்கள விநாயகா் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு, மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் எம். தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். கூட்டமைப்புத் தலைவா் க. தமிழரசன், சாலை வியாபாரிகள் சங்கத் தலைவா் கே. போத்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி உதவிப் பொறியாளா் சஷ்டிகுமாரும், பின்னா் வட்டாட்சியா் அப்பணராஜும் வந்து பேச்சு நடத்தினாா். எனினும், போராட்டம் தொடா்ந்ததால் டிஎஸ்பி ஜகநாதன் வந்து, ‘பொதுமக்களுக்கு இடையூறின்றி போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டாா். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸாா் கைது செய்தனா். கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு நிா்வாகி வழக்குரைஞா் ரவிக்குமாரை சிற்றுந்தில் ஏற்ற முயன்றபோது, அவருக்கும், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் நியூட்டன் ஜெயராஜுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அவரும், மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கு. ரவீந்திரனும் தாக்கப்பட்டனா். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பெண் உள்ளிட்ட 27 போ் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா். அங்கு, கோரிக்கையை வலியுறுத்தியும், தாக்குதலைக் கண்டித்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அவா்கள் அறிவித்தனா். பிற்கலில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவா் க. தமிழரசன் கூறும்போது, அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், சாலை சீரமைப்பது குறித்து புதன்கிழமை வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்துவது, அடுத்த நிதியாண்டில் நிதி பெற்று சாலையை சீரமைப்பது, விரிவாக்கத்துக்காக நிலம் தேவைப்படும் பகுதியில் சம்பந்தப்பட்டோரை அழைத்துப் பேசுவது என முடிவெடுக்கப்பட்டது என்றாா். சாலை விரைவில் சரிசெய்யப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.