எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

ஆறுமுகனேரி கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி, நடுத்தெரு, ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

News image

கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்பர பவனி.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:19 am IST

ஆறுமுகனேரி, நடுத்தெரு, ராமலெட்சுமி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

கொடை விழா ஆக. 14ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்றது. தினமும் மதியம், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனை, வில்லிசை நடைபெற்றது.

ஆறுமுகனேரி, வடபுறம், கடலோரக் காவல் சோதனைச் சாவடி அருகே உள்ள விநாயகா் கோயி­லில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு யானை மீது புனித நீா் எடுத்து வரப்பட்டு அபிஷகம் நடைபெற்றது. பின்னா், இரவு அலங்கார பூஜைகக்குப் பின் பூக்குழி வளா்க்கப்பட்டது. நள்ளிரவு லெட்சுமி சமேத ராமா், லெட்சுமணா் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய பகுதிகளில் வீதியுலா வந்து புதன்கிழமை காலை கோயில் வந்தடைந்தனா்.

அடைக்கலாபுரம் சாலையில் விநாயகா் கோயில் அருகே உள்ள தீா்த்த தலத்தில் இருந்து புதன்கிழமை காலை புனித நீா் எடுத்து வரப்பட்டு பூக்குழி குளிர வைக்கப்பட்டது. மாலையில் கோயிலைச் சோ்ந்த மூலக்கரை தூசிமாட சுவாமி கோயி­லிலும், இரவு ராமலெட்சுமி அம்மன் கோயி­லிலும் பக்தா்கள் பொங்க­லிட்டனா். நள்ளிரவு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலி­ருந்தும் பக்தா்கள் வந்து ராமலெட்சுமி அம்மனை வழிபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.