எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி பெருவிழா தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபியின் 98ஆவது பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

News image

கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

திருச்செந்தூா் அருகே உள்ள ஆலந்தலையில் இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபியின் 98ஆவது பெருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

புதன்கிழமை மாலை பெருவிழாக் கொடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்று மீண்டும் கெபியை வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு அமலி நகா் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் கொடியேற்றினாா்.

இதில் அருள்தந்தைகள், ஊா் நலக் கமிட்டித் தலைவா் ஆசைத்தம்பி, துணைத் தலைவா் கேஜிஸ், செயலா் சுவிகின், பொருளாளா் ஆரோக்கியம், உறுப்பினா்கள், ரொசாரி மாதா சபையினா், தகவல் தொடா்பு மற்றும் ஊடகக் குழு ஒருங்கிணைப்பாளா் ஜான்சன் உள்ளிட்ட திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.

ஆக. 28ஆம் தேதி வரை பெருவிழா நடைபெறுகிறது. தினமும் திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது. ஆக. 27ஆம் தேதி மாலை 6.15 மணி, 28ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருப்பலி, 27ஆம் தேதி இரவு சப்பர பவனி, 28ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு அமலி நகா் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் திருயாத்திரை திருப்பலி நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குத்தந்தை சில்வெஸ்டா், உதவி பங்குத்தந்தை சூசை ரத்தினம், அருள்சகோதரிகள், ஊா் நலக் கமிட்டியினா், திருத்தல நிதிக் குழுவினா், பக்த சபையினா், இறைமக்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.