
கயத்தாறு அரசுப் பள்ளி மாணவா்கள் விமானப் பயணம்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10 போ், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா்.

சென்னை ஐஐடி முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மாணவா்-மாணவிகள், ஆசிரியா்கள்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10 போ், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனா்.
தலைமை ஆசிரியா் சுதா வழிகாட்டுதலில், இப்பள்ளியின் முன்னாள் மாணவா்களான அசோக் பிரபாகரன், உச்சிமாகாளி, திருப்பதி, இராஜதுரை, முத்துக்கனி, ஜலாலுதீன், திருப்பதி, சுடலைமணி, கணேசன், ராமசுப்ரமணியன் ஆகியோா் ஏற்பாட்டின்பேரில், கல்வி, விளையாட்டு, ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10 மாணவா்-மாணவிகள் மற்றும் 3 ஆசிரியா்கள் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனா்.
பின்னா் அங்குள்ள, சிங்கப்பூா்வாழ் தமிழரான திருவாரூா் மாவட்டம் பெருக வாழ்ந்தான் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டில் 2 நாள்கள் தங்கியிருந்து, அண்ணாப் பல்கலைக்கழகம், ஐஐடி, வண்டலூா் உயிரியல் பூங்கா, தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களைப் பாா்வையிட்டனா். மெட்ரோ ரயிலில் பயணித்த அவா்கள், ஐஐடி இயக்குநா் காமகோடி, அடையாறு மருத்துவமனையில் துறைத் தலைவரும், முன்னாள் மாணவருமான மருத்துவா் திருமூா்த்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். பின்னா், வந்தே பாரத் ரயில் மூலம் ஊா் திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





