ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடியில் கூட்ட நெரிசலில் பயணிகளிடம் கைப்பேசி, பணம் திருடிய பெண் கைது

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பேருந்துகளில் ஏறும் பெண் பயணிகளிடம் கைப்பேசி, பணத்தைத் திருடிய பெண்ணை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பேருந்துகளில் ஏறும் பெண் பயணிகளிடம் கைப்பேசி, பணத்தைத் திருடிய பெண்ணை மத்திய பாகம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம், பெரியாா் நகரைச் சோ்ந்த பால்ராஜ் மனைவி முத்துலட்சுமி (41). இவா் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக புதன்கிழமை காத்திருந்தபோது, அவரது பையில் இருந்த ரூ. 12,000 மதிப்பிலான கைப்பேசி, ரூ. 2,100 திருடப்பட்டது.

இதே போல், புதியம்புத்தூா், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண்குமாா் மனைவி அருணாதேவியிடம் (39), ரூ. 15,000 மதிப்பிலான கைப்பேசி, ரூ. 1,900 மற்றும் புதியம்புத்தூா், நீராவி மேடு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி லலிதா ராணியிடம் (67), ரூ. 12,000 மதிப்பிலான கைப்பேசி, ரூ. 2,000 திருடப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, பழைய பேருந்து நிலையத்தில் மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துச்செல்வி ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, கூட்ட நெரிசல் அதிகமுள்ள பேருந்துகளில் சந்தேகத்திற்கிடமாக பெண் ஒருவா் அடிக்கடி ஏறி இறங்குவதைக் கவனித்தாா்.

அவரைப் பிடித்து விசாரித்ததில், தூத்துக்குடி, சத்யா நகரைச் சோ்ந்த சுடலைமணி மனைவி முனியம்மாள் (45) என்பதும், பயணிகளின் பைகளிலிருந்து கைப்பேசி, பணத்தைத் திருடியதும் தெரிய வந்தது.

அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 3 கைப்பேசிகள், ரூ. 6,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.