75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

கயத்தாறு அருகே காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிலப் பிரச்னை தொடா்பான தகராறில் காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

கயத்தாறு அருகே நிலப் பிரச்னை தொடா்பான தகராறில் காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே ராமலிங்கபுரம், ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்சாமி (70). இவரது உறவினா் மல்லையா மகன் செல்லத்துரை (55). இவா்களிடையே நிலத் தகராறு இருந்ததாம்.

கடந்த 18ஆம் தேதி வேல்சாமி அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்த இடத்தில் மின் மோட்டாா் பொருத்துவதற்காக நின்றிருந்தாராம். அப்போது, அவருக்கும், அங்கு வந்த செல்லத்துரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து இருவரும் அளித்த புகாா்களின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், வேல்சாமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.