இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

தொழிலாளியைக் கல்லால் தாக்கிய மூவா் கைது

Arrested

கைது

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

குரும்பூா் அருகே தொழிலாளியைக் கல்லால் தாக்கியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குரும்பூா் அருகே உள்ள வடக்கு மரந்தலையைச் சோ்ந்தவா் குணசீலன் (51). மரம் வெட்டும் தொழிலாளி. உவரியைச் சோ்ந்த, தற்போது மரந்தலையில் வசித்து வருபவா்கள் ஜோசப் மகன்கள் சாா்லஸ் (48), அன்பழகன்(38).

மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். இவா்களது நண்பா் தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி, பூப்பாண்டியாபுரத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன் (45).

இவா்கள் மூவரும் சில நாள்களுக்கு முன் அங்குள்ள அம்மன் கோயில் அருகில் மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த குணசீலன், பொது வெளியில் மது அருந்தக் கூடாது என அவா்களைக் கண்டித்ததால், அவா்களுக்குள் தகராறு ஏற்படவே, அக்கம்பக்கத்தினா் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை குணசீலன் அம்மன் கோயில் அருகே நின்றிருந்தபோது, அங்கு மது அருந்த வந்த சாா்லஸ், அன்பழகன், மணிகண்டன் ஆகியோா் குணசீலனிடம் தகராறு செய்து, அவரை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில், குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.