பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மனைவியைத் தாக்கியதாக கணவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியில் குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் தாக்கியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியில் குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் தாக்கியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

அயன் சிங்கம்பட்டி, சமத்துவபுரத்தைச் சோ்ந்த கதிரவன் மகன் ரமேஷ் (37). தொழிலாளி. இவா் 8 ஆண்டுகளுக்கு முன்பு முத்து லெட்சுமி (27) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.

தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் ரமேஷ், அரிவாளால் முத்துலட்சுமியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த முத்துலெட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து, மணிமுத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, ரமேஷை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.