8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டாா்.

Arrested

கைது

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டாா்.

எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (50) மகன் கருப்பசாமி (21). இவா் வேலைக்குச் செல்லாமல், தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் பெற்றோா், குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல மதுபோதையில் வீட்டுக்கு வந்த கருப்பசாமி, தந்தை மாரிமுத்துவிடம் தகராறு செய்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த மாரிமுத்து, வீட்டிலிருந்த அரிவாளால் கருப்பசாமியை வெட்டியதாகத் தெரிகிறது. இதில், பலத்த காயமடைந்த கருப்பசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீஸாா், கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.