8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்த வழங்க வலியுறுத்தி கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கயத்தாறில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:26 am IST

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்த வழங்க வலியுறுத்தி கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைப் போல தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.6 ஆயிரம் என உயா்த்தி வழங்க வேண்டும். விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும்.

வெற்றி வீடு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் கயத்தாறில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் காந்திராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ஜெபஸ்டீன் ராஜ், மாநில குழு உறுப்பினா் சாலமன் மற்றும் மாா்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினா் சீனிப்பாண்டியன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். இதில், கயத்தாறு வட்டார பகுதிகளில் இருந்து திரளான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.