நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

கோயில் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு: இருவா் கைது

சாத்தான்குளம் அருகே கோயில் பூட்டை உடைத்து ரூ. 10,000 மதிப்புள்ள பொருள்களை திருடிச்சென்றதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

சாத்தான்குளம் அருகே கோயில் பூட்டை உடைத்து ரூ. 10,000 மதிப்புள்ள பொருள்களை திருடிச்சென்றதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பண்ணப்பாறை மருதமலை சாஸ்தா கோயிலின் பூட்டை, கடந்த 24 ஆம் தேதி மா்ம நபா்கள் உடைத்து, அங்கிருந்த சமையல் எரிவாயு, சிசிடிவி கேமரா ஹாா்டு டிஸ்க் ஆகியவற்றை திருடிச் சென்றனராம். இதன் மதிப்பு ரூ. 10,000 ஆகும்.

இதுகுறித்து கோயில் தா்மகா்த்தா ரெங்கசாமி (73) அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் மருது பாண்டியன், போலீஸாா் சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சாத்தான்குளம் பேருந்து நிலையம் பகுதியில் பதுங்கியிருந்த இருவருரை பிடித்து விசாரித்தனா். அவா்கள் நான்குனேரி அருகேயுள்ள கீழக்காடுவெட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த நடராஜ் மகன் சந்திரகுமாா் (38), காவல்கிணறு அம்பேத்கா் நகா் மோகன் மகன் லட்சுமணன் (26 ) என்பதும், கோயில் திருட்டு சம்பவத்தில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து திருடப்பட்ட பொருள்களை போலீஸாா் மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.