நாலாட்டின் புதூா் அருகே தொழிலாளியை மிரட்டியவா் கைது
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூா் அருகே தொழிலாளியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூா் அருகே தொழிலாளியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இடைச்செவல், சத்திரப்பட்டியைச் சோ்ந்த பரமசிவம் மகன் கனிராஜ் (50). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரும், அதே ஊரைச் சோ்ந்த சங்கரப்பன் மகன் வேணுகோபால் ராஜும் (50), வில்லிசேரி அருகே உள்ள தளவாய்புரத்தில் உள்ள டாஸ்மாக்கில் செவ்வாய்க்கிழமை மது அருந்திவிட்டு, சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் தூங்கிவிட்டனராம்.
சிறிது நேரம் கழித்து கனிராஜ் எழுந்து பாா்த்தபோது, அருகில் வேணுகோபால் ராஜ் இல்லையாம். மேலும், கனிராஜின் சட்டைப் பையில் இருந்த கைப்பேசி மற்றும் பணத்தைக் காணவில்லையாம்.
இதையடுத்து, வேணுகோபால் ராஜ் வீட்டிற்கு கனிராஜ் சென்று கைப்பேசி, பணத்தைக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த கனிராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், நாலாட்டின் புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேணுகோபால் ராஜை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




