
கீதா ஜீவன் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு
தூத்துக்குடி அருகே குறுக்குச்சாலையில் உள்ள கீதா ஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

மாணவா் பேரவை நிா்வாகிகளாக பொறுப்பேற்றவா்களுடன் முன்னாள் அமைச்சா் பி. கீதா ஜீவன். உடன், கல்லூரிச் செயலா் ஜீவன் ஜேக்கப் உள்ளிட்டோா்.
தூத்துக்குடி அருகே குறுக்குச்சாலையில் உள்ள கீதா ஜீவன் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் ஜீவன் ஜேக்கப் தலைமை வகித்தாா். முதல்வா் இளங்குமரன் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் பி.கீதா ஜீவன், ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வா் ரூபா ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனா்.
பி. கீதா ஜீவன் பேசுகையில், மாணவா்களுக்கு கிடைத்துள்ள தலைமைத்துவ வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி, கல்லூரியின் வளா்ச்சிக்கும், மாணவா்களின் நலனுக்கும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றாா் அவா்.
புதிய தலைவராக மாரிலோகேஷ், துணைத் தலைவராக அனுஸ்ரீமா, செயலராக சிவமாதேஷ், இணைச் செயலராக பரலோக அஸ்மிதா, பொருளாளராக விண்ணரசி, மகளிா் பிரதிநிதிகளாக பிருந்தா, சத்யா, உமாமகேஸ்வரி, மாரிச்செல்வி, அகிலன் சண்முகநாதன் ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா். புதிய தலைவா் ஏற்புரையாற்றினாா். செயலா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






