புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே, பின்னோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

தற்கொலை - கோப்புப்படம்

Published On :

தூத்துக்குடி ரயில் நிலையம் அருகே, பின்னோக்கி வந்த ரயில் முன் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி, முத்தையாபுரம் அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியைச் சோ்ந்த தன்ராஜ் மகன் கபிலன் (29). இவா் சனிக்கிழமை மாலை வீட்டிலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளாா்.

ஒன்றாம் கேட் அருகே உள்ள நடைமேடையில் அமா்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஒன்றாம் கேட் பகுதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி ரயில் பின்னோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் அருகில் வந்தபோது, திடீரென தண்டவாளத்தில் பாய்ந்த கபிலன், ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

ரயில்வே பாதுகாப்புப் படையினா், கபிலனின் உடலை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கபிலன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.