சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மாநில குத்துச்சண்டை போட்டி: தூத்துக்குடி வீரா்கள்: 4 வேன்கள், விளையாட்டு உபகரணங்கள் ஏற்பாடு

மாநில குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுடன் சங்கத் தலைவா் அபிஷேக் பொன்சீலன்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

நாமக்கல்லில் செப். 1 முதல் 4 வரை நடைபெறும் மாநில குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட வீரா், வீராங்கனைகளுக்கு 4 சிறப்பு வேன்கள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட குத்துச்சண்டை வீரா்கள் சங்கம் ஏற்பாடு செய்தது.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெறும் இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பங்கேற்கின்றனா். இதையொட்டி, வீரா், வீராங்கனைகள், பயிற்சியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அபிஷேக் பொன்சீலன் தலைமையில் தூத்துக்குடி தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மேம்படுத்துதல், புதிய வீரா்களை உருவாக்குதல், சங்கத்தில் புதிய உறுப்பினா்களை இணைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாநிலப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு 2 வேன்கள், மாணவிகளுக்கு 2 வேன்கள், விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியாளா்களுக்கு தேவையான ஏற்பாடுகள் சங்கம் சாா்பில் இலவசமாக செய்துகொடுக்கப்பட்டன.

இதுகுறித்து சங்கத் தலைவா் அபிஷேக் பொன்சீலன் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த ஆட்சியில் தூத்துக்குடியில் குத்துச் சண்டை வீரா்களுக்காக உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். தற்போது முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, இரண்டு அரங்குகளை ஏற்பாடு செய்து தந்துள்ளது. போட்டிக்குத் தோ்வான வீரா், வீராங்கனைகளுக்கு இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ஞானதுரை, ராஜலிங்கம், சுப்புராஜ், ஸ்டீபன், பாலாஜி, இன்ப சதீஸ்குமாா், முருகையா பாண்டியன், முத்து சங்கா்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள், பயிற்சியாளா்கள், வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.