இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தேசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீரா்கள் நாமக்கல் வருகை

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அதிகளவில் பதக்கம் வென்ற தமிழக அணி வீரா்கள், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்தனா்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:09 am IST

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் அதிகளவில் பதக்கம் வென்ற தமிழக அணி வீரா்கள், வீராங்கனைகள் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், நான்டெட் நகரில் 17-ஆவது தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். தமிழக அணி சாா்பில் 85 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்று, 22 தங்கம், 19 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

நாமக்கல்லைச் சோ்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளா் ஷேக்அப்துல்லா, தேசிய நடுவா் தயாநிதி ஆகியோா் தலைமையில் சென்ற தமிழக அணியினா் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வந்தனா். அவா்களை மகரிஷி ஹரிஹரன், தமிழ்நாடு தாய்பாக்சிங் சங்கத் தலைவா் பிராங்க்ளின் பென்னி ஆகியோா் வரவேற்றனா். நவம்பா் மாதம் கோவாவில் நடைபெறும் சா்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழக அணியினா் பங்கேற்க உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.