காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மாநில மின்னொளி கபடிப் போட்டி 3 ஆவது நாள்: முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி அணி வெற்றி

போட்டியில் மோதும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, கரூா் சேரன் கல்லூரி அணி வீரா்கள்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

தூத்துக்குடியில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப், தாமோதரன் நகா் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் இளைஞரணி நண்பா்கள் குழு சாா்பில் முருகேசன் நாடாா் நினைவு கோப்பைக்கான 2-ஆம் ஆண்டு மாநில அளவிலான கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான மின்னொளி கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்றுள்ளன. நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கான முதல் அரை இறுதி ஆட்டத்தில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணியை 30-21 என்ற புள்ளிகள் கணக்கில் கரூா் சேரன் கல்லூரி அணியும், இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில், சாய் கல்லூரி அணியை 36 -35 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை லயோலா கல்லூரி அணியும் வெற்றி பெற்றன.

இதையடுத்து வெற்றி பெற்ற அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. ஏற்பாடுகளை கபடி கந்தன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.