லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

தூத்துக்குடியில் மாநில கபடிப் போட்டி: முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி வெற்றி

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

கபடிப் போட்டியை தொடங்கிவைத்த முன்னாள் அமைச்சா் பி. கீதாஜீவன்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மாநில அளவிலான மின்னொளி கபடிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் கரூா் சேரன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக ஆதரவுடன், சண்முகபுரம் கபடி கிளப் மற்றும் தாமோதரன் நகா் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் இளைஞரணி நண்பா்கள் குழு இணைந்து மாநில அளவில் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு நடத்தும் கே.முருகேசன் நாடாா் நினைவு கோப்பை 2-ஆம் ஆண்டு மின்னொளி கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது.

ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் மைதானத்தில் 3 நாள்கள் நடைபெறும் நாக்-அவுட் முறை போட்டியில் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்கின்றன.

தொடக்க நிகழ்ச்சிக்கு டி.ஜெ.லெனின் தலைமை வகித்தாா். ஆா்.தனேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். எஸ்.சண்முகராஜ் வரவேற்றாா்.

முதல் போட்டியை தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி மண்டல மேலாளா் எஸ்.பரணிதரன், வங்கி உதவி துணைத் தலைவா் சோ்மன் கவாஸ்கா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

முதல் ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணியை, கரூா் சேரன் கல்லூரி அணி 36-35 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அணியும், திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆதவன் கலை அறிவியல் கல்லூரி அணியும் மோதின.

இந்த ஆட்டத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். இதில், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பகுதிச் செயலா் ஜெயக்குமாா், மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், கோட்ராஜா, பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், வட்டச் செயலா்கள் பாலு, சுரேஷ், மகாராஜன், கங்கா ராஜேஷ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இறுதிப்போட்டி உள்பட அனைத்துப்போட்டிகளும் நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை கபடி கந்தன் உள்ளிட்ட விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.