விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விதிகளை மீறி சரக்கு ஏற்றிச் சென்றதாக தூத்துக்குடியில் ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு

லாரிகள் சிறைபிடிப்பு - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூா் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், விதிகளை மீறி சரக்கு ஏற்றிச் சென்ாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த டிரெய்லா் லாரிகளில் கயத்தாறு பகுதியிலிருந்து கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள், பொருள்கள் ஓட்டப்பிடாரம் பகுதிக்கு ஏற்றிச்செல்லப்படுவதாக தூத்துக்குடி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அவா்களும், ஈ-வாகன் சேவை அமைப்பினரும் சென்று, தூத்துக்குடி மடத்தூா் அருகே சரக்கு ஏற்றிச் சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 லாரிகளை தடுத்து நிறுத்தினா். தமிழகத்துக்குள் சரக்குகளை ஏற்றி, மாவட்டத்துக்குள் மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்வதற்கான அனுமதி குறித்து லாரி ஓட்டுநா்களிடம் கேட்டபோது, ஒப்பந்ததாரரின் அறிவுறுத்தலின்பேரில் ஏற்றிச் செல்வதாகத் தெரிவித்தனராம்.

அதையடுத்து, லாரிகளை விடுவிப்பது தொடா்பாக ஒப்பந்ததாரா், லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சு நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் 4 லாரிகளும் விடுவிக்கப்பட்டன.

இதுகுறித்து லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறியதாவது: வெளிமாநில லாரிகள் தமிழகத்துக்கு வந்து சரக்குகளை இறக்கிய பின்னா், விதிகளை மீறி இங்கிருந்து மீண்டும் சரக்குகளை ஏற்றிச் செல்வதால் உள்ளூா் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிமாநில லாரிகள் சரக்கு ஏற்றிச் செல்வது குறித்து வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் முறையாக சோதனை நடத்துவதில்லை. இதுதொடா்பாக அதிகாரிகள் தொடா் சோதனை மேற்கொண்டு, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூா் லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதவாறு, இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.