மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

லாரிகள் நேருக்கு நோ் மோதல் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு

குளித்தலை அருகே புதன்கிழமை இரு லாரிகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இரு லாரி ஓட்டுநா்களும் உயிரிழந்தனா்.

குளித்தலை அருகே குமாரமங்கலம் பகுதியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் உருக்குலைந்த லாரிகளின் முன்பகுதி.

Published On :

குளித்தலை அருகே புதன்கிழமை இரு லாரிகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் இரு லாரி ஓட்டுநா்களும் உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஜீவா காலனியைச் சோ்ந்த ஜெயபால் மகன் மேகநாதன்(37). லாரி ஓட்டுநரான, இவா் மயிலாடுதுறை மாவட்டம், கொல்லுமாங்குடியில் இருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் சேந்தமாங்குடி துா்க்கை அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த முத்தையன் மகன் கோபிகிருஷ்ணன்(48) என்பவா் டிப்பா் லாரியில் கரூா் க.பரமத்தி பகுதியில் இருந்து எம்.சான்ட் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா்.

இரு லாரிகளும் புதன்கிழமை அதிகாலை கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது மேகநாதன் ஓட்டி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே கோபிகிருஷ்ணன் ஓட்டி வந்த லாரி மீது மோதியது. இதில், மேகநாதனும், கோபிகிருஷ்ணனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த குளித்தலை போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக குளித்தலை காவல்நிலைய ஆய்வாளா் குணமதி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.இந்த விபத்து காரணமாக சுமாா் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.