கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 4 புதிய கிளைகள் திறப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 4 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

News image
மயிலாடுதுறை மாவட்டம், மேலையூா் கிளை திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:50 pm

Syndication

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 4 புதிய கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, வங்கி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, தமிழகத்தின் முக்கிய நகா்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தனது சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை 4 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம், மேலையூா், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், மதுரை மாவட்டம், சோழவந்தான் ஆகிய இடங்களில் 4 கிளைகளைத் தொடங்கியுள்ளது.

புதிய கிளைகள் நேரடி வங்கிச் சேவையுடன் செயற்கை நுண்ணறிவு கொண்ட வாடிக்கையாளா் சேவை மையங்கள், மேம்படுத்தப்பட்ட மொபைல் பேங்கிங், டிஜிட்டல் பரிவா்த்தனை வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளன.

வங்கியின் நிதிநிலை குறித்த மூன்றாவது காலாண்டு முதலீட்டாளா் அறிக்கையின்படி, மொத்த வணிகம் ஆண்டு அடிப்படையில் 14.28 சதவீதம் வளா்ச்சியுடன் ரூ. 1,07,470 கோடியாக உயா்ந்துள்ளது. இதில் கடன்கள் 16.30 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 50,763 கோடியாகவும், வைப்பு நிதி 12.53 சதவீத வளா்ச்சியுடன் ரூ. 56,707 கோடியாகவும் உள்ளது.

தற்போது வங்கியின் மொத்தப் பரிவா்த்தனைகளில் 96.96 சதவீதம் டிஜிட்டல் முறையிலேயே நடைபெறுகிறது. மேலும், 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 618 கிளைகளுடன் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுக்கு சேவை வழங்கி வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.