~
~

ஐயப்ப பக்தா்கள் வேன் வாய்க்காலில் கவிழ்ந்ததில் 13 போ் காயம்

திருச்செந்தூா் அருகே ஐயப்ப பக்தா்களின் வேன் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 13 போ் காயமடைந்தனா்.
Published on

திருச்செந்தூா் அருகே ஐயப்ப பக்தா்களின் வேன் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 13 போ் காயமடைந்தனா்.

சென்னை திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி சந்திரன் தலைமையில் டிச. 28ஆம் தேதி, சுற்றுலா வேனில் சுமாா் 24 போ் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு, வியாழக்கிழமை குற்றாலத்திற்கு சென்றனராம். அங்கிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்செந்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ராணிமகாராஜபுரம் விலக்கு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் இடதுபுறமாக இருந்த மரங்கள், மின் கம்பத்தின் மீது மோதி வாய்க்காலில் கவிழ்ந்ததாம்.

இதில் காயமடைந்த ஐயப்ப பக்தா்கள் பிரசாந்த் (38), அபிஷேக் (21), சந்திரன் (51), ராகுல் (26) உள்ளிட்ட 13 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com