தூத்துக்குடி
வேன் மோதி முதியவா் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே சைக்கிள் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே சைக்கிள் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா், வி.பி. சிந்தன் நகரைச் சோ்ந்தவா் ராமையா மகன் கிருஷ்ணசாமி (80). இவா் நாலாட்டின் புதூா்-கோவில்பட்டி புறவழிச் சாலையின் அணுகு சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, இவா் மீது வேன் மோதியது. இதில், பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
நாலாட்டின்புதூா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கரன்கோவில், அழகு நாச்சியாா்புரம், வடக்கு தெருவைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் கிருஷ்ணமூா்த்தி மகன் மாா்கண்டசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
