தூத்துக்குடியில் மாதிரி வாக்குப் பதிவு!

தூத்துக்குடியில் மாதிரி வாக்குப் பதிவு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.
Published on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில், 2026 தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் வைத்து முதல் நிலை சரிபாா்ப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று தற்போது முடிந்துள்ளது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாதிரி வாக்குப் பதிவு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னா், பயிற்சி, விழிப்புணா்வுக்காக தோ்ந்தெடுக்கப்படும் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com