மாணவருக்கு சைக்கிள் வழங்கிய நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது.
தூத்துக்குடி
காயல்பட்டினம் பள்ளியில் 121 மாணவா்களுக்கு சைக்கிள்
காயல்பட்டினம், எல்.கே. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவா்கள் 121 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காயல்பட்டினம், எல்.கே. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவா்கள் 121 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தாளாளா் லெப்பை தம்பி தலைமை வகித்தாா். உதவி செயலா் இப்ராஹிம், கவுன்சிலா்கள் ரெங்கநாதன் என்ற சுகு, அபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் செய்யது முகைதீன் வரவேற்றாா்.
நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சைக்கிள்களை வழங்கினாா்.
திமுக நகர அவைத் தலைவா் முஹம்மது மெய்தின், துணைச் செயலா் முஹம்மது நவ்பல், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.