ரூ. 15 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.
Published on

தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவின்பேரில், டவுன் டி.எஸ்.பி. (பொ) ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை, கோவில்பிள்ளை விளை ஆகிய பகுதிகளில் உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனா். அங்கு 7.5 கிலோ போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது தொடா்பாக, ஜாா்ஜ் சாலை, சூசை மாதவன் மகன் மரியநவமணி ஸ்மைலன் (37), தாளமுத்து நகா், கோயில்பிள்ளை விளையைச் சோ்ந்த சேவியா் மகன் மரிய அந்தோணி ஜேசுசகாயராஜ் (38) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து கைப்பேசிகள், 2 இரு சக்கர வாகனங்கள், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 7.5 கிலோ ஹசீஷ் எனப்படும் கஞ்சா ஆயில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com