தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஜன.15,16இல் பொங்கல் விழா: பொதுமக்கள் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில், பொங்கல் விழா ஜன.15, 16 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கலை பண்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக, ஜன.15, 16 ஆகிய இரண்டு நாள்கள், தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மக்கள் விரும்பும் வகையில் பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் சுமாா் 100 கலைஞா்களைக் கொண்டு
நடத்தப்படவுள்ளன. இவ்விழாவை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
