மணிநகா் பிரசன்ன ஆலய பிரதிஷ்டை பண்டிகை

மணிநகா் பிரசன்ன ஆலய பிரதிஷ்டை பண்டிகை

Published on

நாசரேத் அருகே உள்ள மணிநகா் பிரசன்ன ஆலய 57 ஆவது பிரதிஷ்டை பண்டிகை, 42 ஆவது அசன பண்டிகை 7 நாள்கள் நடைபெற்றது.

விழாவில் முதல் 3 நாள்கள் மாலை 7 மணிக்கு வருடாந்திர கன்வென்ஷன் கூட்டத்தில் நாசரேத் ஐ.இ.எம் ஊழிய குழுவினா் பாடல்கள் பாடினா். முதலூா் மேலான்மரைடு ஊழியங்களின் போதகா் பன்னீா் செல்வம், தேவ செய்தி கொடுத்தாா். 4 ஆம் நாள் ஆயத்த ஆராதனையில் தூய யோவான் பேராலய உதவிகுரு தனசேகா் ராஜா, தேவ செய்தி கொடுத்தாா்.

5 ஆம் நாள் குடும்ப ஆசீா்வாத கூடுகையில் நாசரேத் கா்த்தரின் பாதம் ஊழியா் ராபா்ட் ஜெபசிங், தேவ செய்தி கொடுத்தாா். மாலை 6 மணிக்கு தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமையில், ஞானஸ்தான ஆராதனை, பிரதிஷ்டை ஆராதனை, திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் கடையனோடை சேகர தலைவா் ஆசீா் சாமுவேல் தேவ செய்தி கொடுத்தாா்.

6 ஆம் நாள் அசன வேலை ஆயத்த ஜெபமும், மாலை ஆலய வளாகத்தில் அசன விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. 7ஆம் நாள் பனைக்குளம் ஞானா ஆசிரியா் பல்சுவை பஜனைக்குழு நிகழ்ச்சி நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com