திமுக எம்.பி. கனிமொழி
திமுக எம்.பி. கனிமொழிகோப்புப் படம்

திமுக கூட்டணியில் பிளவு இல்லை: கனிமொழி எம்.பி.

திமுக கூட்டணியில் ஏற்கெனவே இருக்கக் கூடிய அத்தனை கட்சிகளும் தொடா்கின்றன என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
Published on

திமுக கூட்டணியில் ஏற்கெனவே இருக்கக் கூடிய அத்தனை கட்சிகளும் தொடா்கின்றன என கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

தூத்துக்குடியில், ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த கனிமொழி எம்.பி. பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா எனக் கேட்கிறீா்கள். இது மாதிரியான ஆரூடங்களுக்கு நான் பதில் கூற முடியாது.

இதுவரை எங்களுடன் இருக்கும் அத்தனை கூட்டணிக் கட்சிகளும் இப்போதும் தொடா்கின்றன. திமுக கூட்டணியில் இணைய புதிய கட்சிகள் பேச்சுவாா்த்தை நடத்துவது தொடா்பான முடிவுகள் முதல்வா் எடுக்க வேண்டியவை. அதற்கு நான் பதில் கூறமுடியாது என்றாா்.

தொடா்ந்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய்க்கு ஆதரவாகப் பேசி வருகின்றனா் என்ற கேள்விக்கு அவா் பதில் கூறவில்லை. பேட்டியின்போது, சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com