கஞ்சா வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஆறுமுகனேரியில் கஞ்சா வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேயன்விளை பகுதியில் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவா் காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சம்சுதீன் மகன் ஜாபா் சாதிக் (45) ஆட்டோ ஓட்டுநா் என்பதும், கைப்பையில் கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரிடமிருந்து 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com