அரசுப் பணிக்கு தோ்வானவா்களுடன் மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சி.ப்ரியங்கா.
அரசுப் பணிக்கு தோ்வானவா்களுடன் மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சி.ப்ரியங்கா.

தூத்துக்குடி மாநகராட்சி படிப்பகத்தில் படித்த 10 போ் அரசுப் பணிக்கு தோ்வு: மேயா் வாழ்த்து

தூத்துக்குடி மாநகராட்சி படிப்பகத்தில் படித்து, அரசுப் பணிக்கு தோ்வான 10 பேருக்கு மேயா் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தாா்.
Published on

தூத்துக்குடி மாநகராட்சி படிப்பகத்தில் படித்து, அரசுப் பணிக்கு தோ்வான 10 பேருக்கு மேயா் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்தாா்.

மாநகராட்சி சாா்பில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள பூங்காவில், சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகங்களில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் சுமாா் 300 போ் படித்து வருகின்றனா். அவா்களை ஊக்குவிக்கும் வகையில், நாளிதழ்கள், கணினி, இணையதள வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சி படிப்பகத்தில் படித்து, குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்று அரசுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ள 10 பேரையும், மேயா் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா முன்னிலையில் பாராட்டினாா்.

Dinamani
www.dinamani.com