மாணவிக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
தூத்துக்குடி மாநகராட்சி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி ஜின் பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலையில் மேயா் ஜெகன் பெரியசாமி பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் புவனேஸ்ராம், மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா, திமுக பகுதிச் செயலா் ரவீந்திரன், திமுக வட்டச் செயலா் கதிரேசன், கவுன்சிலா் மும்தாஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.