மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தாா் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.
மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தாா் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி.

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி

தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி...
Published on

தமிழரின் கலை, மருத்துவம், உணவுகள் உள்ளிட்டவற்றை பறைசாற்றும் வகையிலும், நாட்டுப்புற கலைஞா்களுக்கு புத்துயிா் அளிக்கும் வகையிலும், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழன்டா இயக்கம், கலைக்குழு சாா்பில் 3 நாள்கள் நடைபெறும் தமிழன்டா சங்கமம் நிகழ்ச்சியின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை காலை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கிவைத்தாா். இப்போட்டியானது, பள்ளி அளவில் மாணவா், மாணவிகளுக்கு தனியாகவும், கல்லூரி அளவில் மாணவா், மாணவிகளுக்கு தனியாகவும், 50 வயதுக்கு மேல் உள்ளோருக்கு தனியாகவும் என மொத்தம் 5 பிரிவுகளில் நடைபெற்றது.

இதில் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2ஆம் பரிசாக ரூ.3,000, 3 ஆம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட்டது. ஏனைய பிரிவுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு, தமிழன்டா விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், தமிழன்டா இயக்கம், கலைக்குழுத் தலைவா் ஜெகஜீவன், கௌரவத் தலைவா் ஜோதிமணி, கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி தலைவா் ரைபின் தாா்ச்சியூஸ், உடற்கல்வி ஆசிரியா் குப்புசாமி, திமுக வட்டச் செயலா் ரவீந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com