விழிப்புணா்வு மினி மாரத்தான்
கூத்தாநல்லூரில் 3-ஆம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டி, சுல்தானா அப்துல்லா ராவுத்தா் கல்லூரியிலிருந்து தொடங்கியது. காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
திருவாரூா்- மன்னாா்குடி பிரதான சாலை, கூத்தாநல்லூா் முக்கிய வீதிகள் வழியாக, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்றது.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமை வகித்தாா். திருவாரூா் வேலுடையாா் கல்விக் குழுமத் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் இஸ்மாயில் வரவேற்றாா்.
ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி தாளாளா் மருத்துவா் ஜெ.பி. அஷ்ரப் அலி மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, எக்ஸ்னோரா பொருளாளா் முனவருதீன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
