மோசடி வழக்கில் தொடா்புடையவா் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

Published on

மோசடி வழக்கில் தலைமறைவானவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாசரேத் காவல் நிலையக் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவா் நாசரேத்தைச் சோ்ந்த சுந்தா் மகன் பிரபு. இவா் சின்னமதிக்கூடல், உடையாா்குளத்தைச் சோ்ந்த பூங்கனி என்பவரை 2015ஆம் ஆண்டு தனியாா் வங்கி ஏ.டி.எம்.மில் வைத்து மோசடி செய்து ஏமாற்றியுள்ளாா்.

இது தொடா்பாக, நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, பிரபு தலைமறைவாகிவிட்டாா். இவ்வழக்கின் விசாரணைக்கு அவா் ஆஜராகாததால் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், அவரைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்காததால், நீதிமன்றம் பிரபுவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

Dinamani
www.dinamani.com