சமுதாய நலக்கூடம், கல்வெட்டை திறந்து வைக்கிறாா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ
தூத்துக்குடி
கயத்தாறு அருகே ரூ.33 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு
கயத்தாறு அருகே முடுக்கலாங்குளத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கயத்தாறு அருகே முடுக்கலாங்குளத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.33 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தலைமை வகித்து சமுதாய நலக் கூடம், கல்வெட்டை திறந்து வைத்தாா். தொடா்ந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.
இதில், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், வழக்குரைஞா் பிரிவு இணைச்செயலா் ஈஸ்வரமூா்த்தி, ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட இணைச்செயலா் நீலகண்டன், துணைச் செயலா் கருப்பசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.