சைக்கிள்களை வழங்கிய ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் டி.பி.பாலசிங்.
தூத்துக்குடி
மெஞ்ஞானபுரம் பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு
மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ஜான்சன் ஆபிரகாம் தலைமை வகித்தாா்.ஆசிரியா் எமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் டி.பி.பாலசிங் பங்கேற்று, 71 மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினாா்.
இதில் பள்ளி முன்னாள் மாணவா்கள் மில்டன், சஞ்சய், ராஜபிரதீபன்,திருச்செந்தூா் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

