~
~

சுமை ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் காயம்

Published on

கோவில்பட்டி அருகே வாழைக்காய் பாரம் ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு வாழைக்காய் ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ, மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி இபி காலனி அருகே சென்றபோது, பின்பக்க டயா் வெடித்ததில் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநா் திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த சிதம்பரம் மகன் மாா்த்தாண்டம் (53) காயமடைந்தாா்.

ஆட்டோவில் ஏற்றி வந்த வாழைக்காய்கள் சாலையில் சிதறின. அப்போது அந்த வழியாக வந்த கோவில்பட்டி காவல் கண்காணிப்பாளா் ஜெகநாதன், விபத்தில் சிக்கிய ஓட்டுநரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் ஈடுபட்டாா்.

விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com