ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

இருசக்கர வாகனம் - ஆட்டோ மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் சுமை ஆட்டோ நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 6:46 pm

பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மற்றும் சுமை ஆட்டோ நேருக்குநோ் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள மதியாணி ஆனந்த ஜோதிபுரத்தைச் சாா்ந்தவா் ப. ஹரிசுதன் (21) ஈரோட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தாா். இவா் அண்மையில் சொந்த ஊரான மதியாணிக்கு வந்துள்ளாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை சாலையில் சென்றபோது பிதாவூா் பிரிவு சாலை அருகே எதிரே வந்த சுமை ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான சுமை ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.